Tuesday, July 19, 2011

தொலைந்து போனவர்கள்...


கடந்த 20 வருடங்களில் தொலைந்து போனவர்கள்...
(வடிவம் : சுரேஷ் கிருஷ்ணன்)

அதிகாலையில் "அம்மா பால்" என்று கூவும் பால்கார பன்னீர்செல்வம் அண்ணன்...
"அம்மா காய்" என்றழைக்கும் அன்னம்மா அக்கா...
சுட...சுட... "இடியாப்பம்" சைக்கிளில் வரும் இசக்கிமுத்து தம்பி...
"துடப்பம் வாங்கல துடப்பம்" சைதாப்பேட்டை குப்பம்மா...
"பாத்திரம் கலாய் பூசரது...அம்மா பத்திரம் கலாய் பூசரது" காதர்பாய்...
"அம்மா பொரி,வருத்த வேர்க்கடலை,அவுலு" ராஜம்மா பாட்டி...
"ஐஸ் பால் ஐஸ்" "கப் ஐஸ்" " குச்சி ஐஸ்" என மணி அடிக்கும் சகாயம் தாத்தா...
"பழய பேபர்,புட்டி,பால் கவர்,பழய ப்ளாஸ்டிக் ஜாமான்" வாங்கிறது பாண்டியன் மாமா...
"அம்மா போஸ்ட், மணி ஆர்டர், தந்தி"....ஒலி பெருக்கி தனபால் மாமா...
ஏன்....ரேடியோ செய்தி வாசிக்கும் "செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி" வரை...

இவர்கள் எங்கே தொலைந்து போனார்கள்........

இன்று...

காளான்போல முளைத்திருக்கும் பன்னாட்டு பலபொருள் அங்காடி, கொரியர் நிறுவனங்கள்,
ஸூபர்‌மார்கெட், டிஃப்பன் ஓட்டல், காய்,கனி அங்காடிகள். இவைகள் தான் மேற்கண்டவர்களை முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

என் கைபேசி ஒலிக்கிறது...காலை மணி 8.30.
எழுந்து வந்தேன் படுக்கைவிட்டு...
என் வாசல் க்ரில் கதவில் பால் பாக்கெட் தொங்கிகொண்டிருந்தது...
மெஸ் சாப்பாட்டு கேரியர் வாசல் படியில் தலை சாய்ந்து...
ந்யூஸ் பேபர் கதவிடுக்கில்....
ஹாலில் தொலைக்காட்சியில் "தொலைந்துபோனவர்கள்" ஸீரியல் காட்சி
"அம்மா அப்பாவிடம் ...என்னங்க நம்ம பொன்ன கானங்க".....

தலை சுற்றியது எனக்கு...
நான் மட்டும் அந்தரத்தில்...இறக்கை இல்லாமல் பறந்துகொண்டு.....
நான் எங்கே??????
நானும் தொலைந்துவிட்டேன்.......



By Suresh Krishnan
Hyderabad,India

No comments: