Friday, August 4, 2017

Bharathyin Kavithaigalil Enakku Pidithadhu.......

சுதந்திரப் பள்ளு


(பள்ளர் களியாட்டம்)
ராகம் - வராளி தாளம் - ஆதி

பல்லவி

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு)

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
ல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம். (ஆடு)

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)

Tuesday, July 19, 2011

எங்கே அந்த பச்சை பசேல் "பார்வதி இல்லம்"

No.26, 18th Floor, "Green Medows" Towers.....
(by Suresh Krishnan, Hyderabad,India)

வருஷம்: 1970.
என் வயது: 10.

என் அப்பா வீட்டு வாசல்:

பீம்..பீம்..படகு போல பிளிய்மௌத் கார் "பார்வதி இல்லம்" வாசலில் காவளாள் கந்தசாமி கதவு திறக்க தவழ்ந்து சென்று போர்டிகவில் நின்றது. காரிலிருந்து நான், அம்மா,அப்பா,அக்கா இறங்கி வீட்டுக்குள் நடந்தோம்.

வீட்டை சுற்றி பலவகையான பழ மரங்கள், பூ செடிகள், பச்சை பட்டு கம்பளம் விரித்தது போல்
அழகிய புல்வெளி, ஒரு மரத்தின் கீழ் அழகான ஊஞ்சல், ஒரு சிறிய தடாகம், அதில் சில அல்லி,தாமரை மலர்கள்....

உள்ளே பெரிய வரவேற்பறை அதில் பிரம்பு சாய்வு நாற்காலிகள், பேபர், புத்தகம் வைக்க தீபாய் அதிலிருந்து பெரிய ஹால், ஹாலில் வலப்புறம் பெரிய பூஜை அறை,கமகம ஊதுவத்தி வாசனை, கிராமபோன் பெட்டியிலிருந்து எம்.எஸ். எஸ். சுப்ரபாதம்....மெல்ல ஒலித்துகொண்டிருந்தது. பூஜை அறை அடுத்து மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள். இடப்புறம் பெரிய படுக்கை அறை, அதற்கு அடுத்து பிரமாண்டமான சமையல் அறை. அதன் முகப்பில் அமர்ந்து சாப்பிடும் அறை...அதன் வெளியே பின்கட்டு....தோட்டம்...மாட்டுக்கொட்டில்.

மாடியில்...அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு அறை, எனக்கு ஒரு அறை, என் அக்காவுக்கு ஒரு அறை. உறவினர்கள் வந்தால் தங்க ஒரு அறை. கீழே இரண்டு குளியல் அறைகள், மாடியில் இரண்டு குளியல் அறைகள். மாடி ஹாலில் நடுவே அழகிய வேலைப்பாடு நிறைந்த ஊஞ்சல், தேக்கு மரத்தில் செய்த சாமான்கள், நாற்காலிகள், மேஜைகள், பீரோக்கள்...வீட்டில் வேலை செய்ய நான்கு ஆட்கள், வாயிலில் காவல்காரர்....
ஏஸீ கிடையாது, ஃப்ரிட்ஜ் கிடையாது, வாஷிங் இயந்திரம் கிடையாது, தொலைக் காட்சி பெட்டி கிடையாது, கை பேசி கிடையாது........

வருடம்: 2010.
என் வயது: 50.

என் அபர்‌ட்மெஂட் வாசல்:

"கிரீன் மெதோவ்ஸ்" டவர் வாசல் வழியாக உள்ளே நுழைந்த என் மாருதி கார், எனக்கு ஒதுக்க பட்ட கார் பார்கிங்கில் நிற்க...நான், என் மனைவி, என் மகள் இறங்கி லிஃப்ட் நோக்கி நடந்தோம். வழி நெடுக பல முகங்கள்..ஹாய், ஹெலோ ராம், ஹௌ ஆர் யூ? சம்பாஷணைகள்..லிஃப்ட் மெல்ல ஏற துவங்க சில மணித்துளிகளில் 18ம் மாடி அடைந்து நின்றது. வெளியே வந்து வலப்புறம் நடந்தோம். வீட்டு என் 26 வாசலில் நாங்கள், சாவி செலுத்தி வீட்டை (கூட்டை) திறந்து உள்ளே செல்ல....

வரவேற்பறை, ஹால், எப்படி வேண்டுமானாலும் சொல்லும்படியாக ஒரு பத்துக்கு பதினைந்து அறை, இல்ல, இல்ல ஹால். நடுவில் ஒரு ஸோஃபா கம் பெட், இரண்டு ஃபைபர் சேர்ஸ், அதில் அமர்ந்து கையை மெல்ல சோம்பல் முறிக்க என் கை டீவீ பெட்டியை தட்ட, மெல்ல நகர்ந்து என் மனைவிக்கும் இடம் கொடுக்க ஆசுவாசம் ஆனோம். என் மகள் உள்ளெய் சென்று ல்யாப்‌டாபில் மூழ்கினாள். நல்ல தண்ணி தாகம், நான் எழுந்து சென்று வலப்புறம் இருந்த சமயலறை உள்ளிருந்த ஃப்ரிட்ஜ்லிருந்து ஒரு பாட்ல் தண்ணீர் கொண்டு வந்து என் மனைவியிடம் கொடுத்தேன். சமயலறை சுவற்றில் இருந்த ஷெல்ப்ல் "பார்வதி இல்லத்து" பிள்ளையாரும், முருகரும் (சாமி படங்கள்தான்) இடம் பங்கு போட்டார்கள். ஹாலை அடுத்து வலப்புறம் ஒரு படுக்கை அறை,அதில் ஒரு பால்கொனி. என் மகள் லப்டோபில் மூழ்கி பிஸீ ஆகியிருந்தாள். இடப்புறம் ஒரு படுக்கை அறை நான் மெல்ல உள்ளே சென்று தினசரி படிக்கலானேன். டீவீயும் ஓடிக்கொண்டு இருந்தது. என் அருமை மனைவி சமயலறை உள்ளே சமைக்க துவங்கிவிட்டாள்.

நாம் மெல்ல எழுந்து பால்கொனி சென்று மெல்ல கீழ் நோக்கினேன்....நிலவிலிருந்து பூமியை பார்ப்பதுபோல வெறித்து கொண்டே....எங்கே அந்த பச்சை பசேல் "பார்வதி இல்லம்" என்று எனக்குள்ளேயே பலமுறை கேட்டுக்கொண்டேன்...பதில் மட்டும் இல்லை.

வீட்டில் இருந்த பசுமை இப்போது வீட்டின் பெயரில் இருந்தது.

ஸமயலரைஇலிருந்து குக்கர் கூக்குரலில், நான் திடுக்கிட்டு நிஜதிற்குள் ஜனனமானேன்.
ஆனால் பழய நிஜங்கள் நிழலாயிருந்தது.

சுரேஷ் கிருஷ்ணன்.

தொலைந்து போனவர்கள்...


கடந்த 20 வருடங்களில் தொலைந்து போனவர்கள்...
(வடிவம் : சுரேஷ் கிருஷ்ணன்)

அதிகாலையில் "அம்மா பால்" என்று கூவும் பால்கார பன்னீர்செல்வம் அண்ணன்...
"அம்மா காய்" என்றழைக்கும் அன்னம்மா அக்கா...
சுட...சுட... "இடியாப்பம்" சைக்கிளில் வரும் இசக்கிமுத்து தம்பி...
"துடப்பம் வாங்கல துடப்பம்" சைதாப்பேட்டை குப்பம்மா...
"பாத்திரம் கலாய் பூசரது...அம்மா பத்திரம் கலாய் பூசரது" காதர்பாய்...
"அம்மா பொரி,வருத்த வேர்க்கடலை,அவுலு" ராஜம்மா பாட்டி...
"ஐஸ் பால் ஐஸ்" "கப் ஐஸ்" " குச்சி ஐஸ்" என மணி அடிக்கும் சகாயம் தாத்தா...
"பழய பேபர்,புட்டி,பால் கவர்,பழய ப்ளாஸ்டிக் ஜாமான்" வாங்கிறது பாண்டியன் மாமா...
"அம்மா போஸ்ட், மணி ஆர்டர், தந்தி"....ஒலி பெருக்கி தனபால் மாமா...
ஏன்....ரேடியோ செய்தி வாசிக்கும் "செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி" வரை...

இவர்கள் எங்கே தொலைந்து போனார்கள்........

இன்று...

காளான்போல முளைத்திருக்கும் பன்னாட்டு பலபொருள் அங்காடி, கொரியர் நிறுவனங்கள்,
ஸூபர்‌மார்கெட், டிஃப்பன் ஓட்டல், காய்,கனி அங்காடிகள். இவைகள் தான் மேற்கண்டவர்களை முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

என் கைபேசி ஒலிக்கிறது...காலை மணி 8.30.
எழுந்து வந்தேன் படுக்கைவிட்டு...
என் வாசல் க்ரில் கதவில் பால் பாக்கெட் தொங்கிகொண்டிருந்தது...
மெஸ் சாப்பாட்டு கேரியர் வாசல் படியில் தலை சாய்ந்து...
ந்யூஸ் பேபர் கதவிடுக்கில்....
ஹாலில் தொலைக்காட்சியில் "தொலைந்துபோனவர்கள்" ஸீரியல் காட்சி
"அம்மா அப்பாவிடம் ...என்னங்க நம்ம பொன்ன கானங்க".....

தலை சுற்றியது எனக்கு...
நான் மட்டும் அந்தரத்தில்...இறக்கை இல்லாமல் பறந்துகொண்டு.....
நான் எங்கே??????
நானும் தொலைந்துவிட்டேன்.......



By Suresh Krishnan
Hyderabad,India

Thursday, May 12, 2011

Navagraha Sthala Yathraa


Navagraha Sthala Yathra…………..Suresh Krishnan


We started from Chennai on 9th May 2011 Morning at 5 am in a Car towards Trichy and first visited Melmaruvathur Temple and had a nice darshan, then continued our travel to Siruvachur Madhura Kaliamman temple, near Villupuram we finished our break fast. Aft6er Siruvachur darshan proceeded to Samayapuram Mariamman temple in Trichy. After darshan we went to Thiruvanaikovil Siva Darshan (Sri Jambukeshwarar & Akilandeshwari) then we had Lunch and waited for Darshan in Srirangam (Sri Ranganathar & Renganayaki Thaayar) Chakrathazvaar, Sri Ramanujar @ 4 pm a surprise guide from Temple took round the temple and showed darshan which we didn’t expected what a memorable experience. From there we proceeded to Malaikottai Uchipillayar Temple where we climbed 600 steps (up & down) and  had a nice darshan and also the view of the Trichy city from the Top.

After a successful completion of the Trichy leg we proceeded to Tanjore 60 km from Trichy and visited Lord Prakadeeswara Temple and wonderful darshan was blessed by lord to us. it was 8 pm and we proceeded to Kumbakonam another 40 kms journey from Tanjore. It is really a town of Temples. We stayed over night in Kumbakonam.

10th May 2011, Morning 6.30 am we started our Kumbakonam leg by visited Chakrapani Temple, Adhi Kumbeshwarar Temple, Ramaswamy Temple, Kasi Viswanathar Temple, Mahamaham kulam and Nageswarar Temple. In between we finished our breakfast and returned to room for a after noon break. By 5 pm we started our real journey towards the Navagraha Darshan to Thingaloor (Lord Moon) and visited Thiruvayaru Samadhi and way back visited Ganapathy Agraharam. From where we proceeded to Thrukarugaavoor – Garba Rajkshambigai temple and to swamimalai a temple where Lord Subramania  had given upadesam to Lord Shiva (father) with this we finished our second day leg and returned to kumbakonam.





11th May 2011, Morning 5.45 am we started off to Aalangudi (Lord Guru Bagawan)  temple and did archana and proceeded to Thiru Nageswaram (Lord Raaghu) and to Oppiliappan Temple near by. After the break fast and started towards other Navagraha Temples starting with Suryanaar Koil (Lord Sun) then to Kanchanur (Lord Sukiran) from there we proceeded to Thirunallaar (Lord Shani) and did darshan and went to Thirukadaiyur Abirami Temple after darshan we rested at Poombhukar a sea side historical heritage place which was connected with Kannagi & Kovalan life. From there we started to Keezhaperumpallam (Lord Kethu) after a nice dashan there we traveled to Thiruvengadu (Lord Bhudhan) and had a wonderful darshan from there proceeded to Vaitheeswaran Koil (Lord Angarakan) and completed successful the Navagraha Darshan with the blessings of the Almighty. We reached Chennai at 11.30pm on Wednesday the 11th May 2011.